சரியான நேரத்தில் முடிவுகள் - மோடி பெருமிதம்..!

0 6803

சரியான தருணத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நொய்டா, மும்பை மற்றும் கொல்கத்தாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அமைத்துள்ள 3 அதிவிரைவு ஆய்வகங்களை காணொலியில் திறந்து வைத்து பிதமர் மோடி பேசினார். அப்போது பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்ற அவர், குணமடைவோர் எண்ணிக்கையும் பல நாடுகளை விட அதிகம் என்றார்.

நாடு முழுதும் 11000 கொரோனா சிகிச்சை மையங்களும், 11 லட்சம் தனிமைவார்டு படுக்கைகளும் உள்ளதாக மோடி கூறினார், நாளொன்றுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா சோதனைகள் நடத்தப்படுவதாக தெரிவித்த அவர், ஒவ்வொரு இந்தியரையும் காக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம் என்றார். சரியான தருணத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது என்றார் அவர்.

புதிதாக திறக்கப்படும் ஐசிஎம்ஆர் அதிவிரைவு ஆய்வகங்களால் மேலும் கூடுதலாக தினசரி 10000 சோதனைகளை நடத்த முடியும் என மோடி கூறினார். இந்த ஆய்வகங்களில் கொரோனா மட்டுமின்றி எச்ஐவி, டெங்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட சோதனைகளும் நடத்தப்படும் என்றார் அவர்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மனித வளத்தை தயார் செய்யும் சவாலில் இந்தியாவின் எழுச்சி பாராட்டத்தக்கது என்றும் மோடி குறிப்பிட்டார். குறுகிய காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுகாதார பணியாளர்களும், மருத்துவ பணியாளர்களும், அங்கன்வாடி மற்றும் இதர பணியாளர்களும் கொரோனாவுக்கு எதிராக போராட பயிற்சி பெற்றுள்ளதாகவும் மோடி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments