வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் எஞ்சின்களை வழங்கியது இந்தியா

0 3976
வங்க தேசத்திற்கு இந்தியா அனுப்பிய 10 ரயில் எஞ்சின்கள்

வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் எஞ்சின்களை இந்தியா வழங்கியது. டெல்லியில் இதற்காக நடந்த காணொலி நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும், வங்கதேச வெளியுறவு மற்றும் ரயில்வே அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 18 ஆயீரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவித் திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் 17 ரயில்வே திட்டங்களுக்கு உதவிட இந்தியா முன்வந்துள்ளது. இவற்றில் ரயில் பாலங்கள், சிக்னல் அமைப்புகள், அகல ரயில்பாதை டீசல் எஞ்சின்கள் உள்ளிட்ட 9 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கெடே (Gede) ரயில் நிலையத்தில் இருந்து 10 ரயில் எஞ்சின்களும் ஒன்றன் பின் ஒன்றாக, வங்க தேசத்தில் உள்ள தர்ஷனா ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments