தமிழகத்தில் மேலும் 6,993 பேருக்கு கொரோனா.. 77 பேர் உயிரிழப்பு..!

0 4639
தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை வைரஸ் தொற்றுஉறுதி ஆனோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 37 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 26 வயது இளைஞர், செங்கல்பட்டில் 95 வயது முதியவர் உள்பட 77 பேர், ஒரே நாளில் வைரஸ் தொற்றால் உயிரிழந்திருப்ப தாக, கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில், 63 ஆயிரத்து 250 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

சுமார் 55 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 723 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை, கொரோனாவில் இருந்து நலமடைந்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 62 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments