தங்கம் விலை உயர்வை வாய்ப்பாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்

0 8595
தங்கம் விலை உயர்வை வாய்ப்பாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதை வாய்ப்பாக பயன்படுத்தி, அடமானத்தில் வைத்துள்ள நகைகளை விற்று கடனை அடைக்கும் போக்கு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத தொகையை அடமானக் கடனாக வழங்கலாம். தங்கத்தின் விலை உயர்வால், இந்த அடமானக் கடன் மதிப்பு கிராமுக்கு 500 ரூபாய் அளவு அதிகரித்துள்ளது.

22 காரட் தங்கத்திற்கு, ஊரடங்கிற்கு முன்னர் கிராமுக்கு 2 ஆயிரத்து 850 ரூபாயாக இருந்த இந்த மதிப்பு, 3 ஆயிரத்து 350 ரூபாயாக உயர்ந்துள்ளது என மணப்புரம் ஃபைனான்ஸ் சிஇஓ நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளவர்கள், அதை மீட்டு விற்றுவிடும்போக்கு அதிகரித்திருப்பதை காண முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல, விலை உயர்வைப் பயன்படுத்தி, அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கூடுதலாக கடன்பெறுவது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் வட்டியெல்லாம் கழித்ததுபோக, ஒரு சவரனுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வாடிக்கையாளர்களால் கடன்பெற முடிகிறது என சிட்டி யூனியன் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் விலை உயரும் வேகத்தில் சரியவும் கூடும் என்பதால், அதன் மீதான அடமானக் கடன் மதிப்பை அதிகரிக்கவில்லை என்றும் சில வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments