கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1029
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

எம்எல்ஏக்கள் 17 பேர் அத்தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கும் தற்போது பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனா உறுதியாகி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ், சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments