தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு இன்று தொடக்கம்

0 5336
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு தொடங்கியுள்ளது. மார்ச் 24இல் நடைபெற்ற வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாட தேர்வை கொரோனா அச்சம் காரணமாக எழுதாமல் போனவர்களுக்கான மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது.

இத்தேர்வை 289 தேர்வு மையங்களில் 846 மாணவர்கள் எழுதி வருவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் 18 தேர்வு மையங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருவதாகவும், மாணவர்கள் வந்து செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்க உள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments