அடுத்தவர் மத நம்பிக்கைகளை இழிவு செய்வது தவறு - விஜயகாந்த்

0 10673
கந்தர் சஷ்டி கவசம் படிப்பது போன்று வீடியோ வெளியிட்டுள்ள விஜயகாந்த்

அடுத்தவரின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது தவறு என தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், கந்தர் சஷ்டி கவசம் படிப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அதில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது தங்கள் வழக்கம் என்றும் இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு என்று குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். இறுதியாக எம்மதமும் சம்மதம் என்று பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments