பாகிஸ்தானை தனது அதிகாரப்பிடியில் கொண்டு வரும் சீனா..!

0 7973

ராணுவத்தின் கைப்பாவையாக இருப்பதாக கூறப்படும் பிரதமர் இம்ரான் கானை பயன்படுத்தி பாகிஸ்தானை தனது அதிகார பிடியில் கொண்டுவரும் திட்டத்தில் சீனா வெற்றி பெற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் அங்குள்ள மக்களின் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து அதிபர் ஷி ஜின்பிங்கின் சீனா-பாகிஸ்தான் பொருளாதார, காரிடார் ஆணையம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி பாகிஸ்தானின் ஒட்டுமொத்த திட்ட அமலாக்க அமைச்சகமும் சீனாவின் கட்டுப்பாட்டில் வரும் என சொல்லப்படுகிறது. அத்துடன் பாகிஸ்தான் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டனை விதிக்கும் அரசியலமைப்பு அதிகாரமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கடந்த 2016 முதல் ஷி ஜின்பிங் இந்த பொருளாதார காரிடார் திட்டத்தை வற்புறுத்தி வருகிறார். ஆனால் இதற்கு முன்னர் இருந்த நவாஸ் ஷெரீப் அரசு அதை ஏற்க மறுத்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments