தமிழ்நாட்டில் இன்று 6986 பேருக்கு கொரோனா உறுதி

0 5339
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85 பேர் பலி

தமிழ்நாட்டில், இன்று புதிதாக  6 ஆயிரத்து  986 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 13 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 75 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் பிறந்து 37 நாட்களே ஆன ஆண் குழந்தை, தஞ்சையில் 15 வயது சிறுமி உள்பட 85 பேர், வைரஸ் தொற்று ஆளான நிலையில் உயிரிழந்திருப்பதாக, கூறப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில், 64 ஆயிரத்து 129 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. இன்று, 5 ஆயிரத்து 471 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை, நலமடைந்தோர் எண்ணிக்கை,  ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 526ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments