கர்நாடகாவில் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகைக்கு அனுமதி

0 1756
சமூக இடைவெளியுடன் 50 பேருக்கு மிகாமல் தொழ அனுமதி

ஈது பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ளலாம் என கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

பள்ளிவாசல்களில் அதிகபட்சமாக 50 பேர் வரை அனுமதிக்கப்படலாம் எனவும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதுடன் மூத்த குடிமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழ வருபவர்கள் சொந்தமாக தொழுகை விரிப்பை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வரும் ஒன்றாம் தேதி  பக்ரீத் எனப்படும் ஈதுப் பெருநாள் கொண்டாடப்படும் என டெல்லி ஜுமா மஸ்ஜித் இமாம் அறிவித்துள்ள நிலையில், பல மாநிலங்கள் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments