அமெரிக்காவில் பாக்கெட் சாலடுகளை சாப்பிட்ட 600 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

அமெரிக்காவின் பல மாநிலங்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட காய்கறி சாலட்டுகளை சாப்பிட்ட 600 க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.
இல்லினாய்சில் உள்ள Fresh Express என்ற நிறுவனத்தின் தயாரிப்பு கூடத்தில் இந்த சாலட்டுகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டன. காரட் மற்றும் இதர காய்கறிகளால் தயாரான இந்த சாலட்டை சாப்பிட்ட ஜார்ஜியா, கன்சாஸ், மின்னசொட்டா, பென்சில்வேனியா உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
சைக்ளோஸ்போரா எனப்படும் ஒட்டுண்ணி வகையால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணி பாதித்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் வயிற்றுப் போக்கு ஒரு மாதம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சாலட் பாக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன. இது போன்ற பாக்கெட் சாலட் வகைகளை விற்க கூடாது என அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.
Comments