தண்டவாளப் பராமரிப்புத் தொழிலாளர்களுக்குப் பயன்படும் மிதிவண்டி

0 5154
தண்டவாள ஆய்வுப் பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவும்

ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வசதிக்காக வடமேற்கு ரயில்வேயில் ரயில் மிதிவண்டியை உருவாக்கியுள்ளனர்.

தண்டவாளப் பராமரிப்புப் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் நடந்து செல்வது வழக்கம். கடும் வெயில், மழைக்காலத்தில் அவ்வாறு செல்வது கடினம். புதிதாகக் கண்டுபிடித்துள்ள ரயில் சைக்கிள் டிராக்மேன்களுக்கு உதவியாக இருக்கும்.

முன்புறம் ஒன்றும், இடப்பக்கம் பக்கவாட்டில் ஒன்றும் எனத் தண்டவாளத்தில் உருளும் வகையில் சிறிய இரும்புச் சக்கரங்களை இரும்புக் குழாய்களால் மிதிவண்டியில் இணைத்துள்ளனர்.

நடந்து செல்லும் ஒருவர் 5 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டவாளத்தை ஆய்வு செய்ய முடியும். இந்த மிதிவண்டியில் சென்றால் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆய்வு செய்யலாம்.

20 கிலோ எடைகொண்ட மிதிவண்டியில் இருவர் செல்லலாம். சராசரியாக மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்திலும், அதிக அளவாக மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல முடியும். வடமேற்கு ரயில்வேயின் மார்வாரில் உள்ள பொறியாளர்கள் இந்த ரயில் மிதிவண்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments