கொரோனா பாதிப்பு உள்ள தெருக்களில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை..!

0 7305
தெருவில் ஒருவருக்கு பாதிப்பு என்றால் தெருவாசிகள் அனைவருக்கும் பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்களில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாயமாக  பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்து. மாநகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

ஆரம்பம் தொட்டே பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்த தண்டையார் பேட்டை மற்றும் ராயப்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று குறைந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஆனால் சென்னை மத்திய வட்டாரத்தில் உள்ள கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

அதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மண்டலங்களில் உள்ள ஏதாவது ஒரு தெருவில் உள்ள ஒருவருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டால், அந்தத் தெரு முழுவதும் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக நடமாடும் பரிசோதனை வாகனங்கள் பயன்படுத்துப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments