திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,515 பேருக்கு கொரோனா

0 3803
திருவள்ளூரில் 475, செங்கல்பட்டில் 477 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், தேனி, நெல்லை மாவட்டங்களில் இன்று 1,515 ((1515)) பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

திருவள்ளூரில் 475 பேருக்கும், செங்கல்பட்டில் 477 பேருக்கும், வேலூரில் 204 பேருக்கும், தேனியில் 169 பேருக்கும், நெல்லையில் 190 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதித்தோருடன் தொடர்பில் இருந்தோர் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் வேலூர் மாவட்டத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து, கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,132ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments