மனிதர்களைப் போல குச்சியை எடுத்து உடலை சொறிந்து கொள்ளும் யானைகள்... வைரல் வீடியோ

0 2324

னிதர்களைப் போலவே செயல்படும் விலங்கினங்கள் பல உண்டு. மனிதர்கள் செய்வதைப் பார்த்து அதே போலவே நடப்பதில் குரங்குகளுக்குத்தான் முதலிடம் . குரங்குகள் போல யானைகளும் படு புத்திசாலியான விலங்கு. மனிதர்கள் முதுகை சொறிந்து கொள்ள குச்சிகளை பயன்படுத்துவது உண்டு. தற்போது, மனிதர்கள் போலவே யானைகளும் உடலை சொறிந்து கொள்ள குச்சிகளை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு அருகேயுள்ள பன்னரகட்டா வனச் சரணாலயத்தில் 21 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், சுந்தர் என்ற யானை படு புத்திசாலி. மகராஸ்டிர மாநிலம் கோலாப்பூரில் இருந்து மீட்கப்பட்ட இந்த யானைக்கு தற்போது 20 வயதாகிறது.  இந்த யானை மனிதர்களைப் போலவே தன் உடலை சொறிந்து கொள்ள குச்சியைப் பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு , குச்சியை வைத்து பல்லும் குத்திக்கொள்கிறது.  இந்த யானையைப் பார்த்து அதன்  தோழியான மேனகா என்ற யானையும் சுந்தரைப் போலவே குச்சியை எடுத்து உடலை சொறிந்து கொள்ள பழகிக் கொண்டுள்ளது. யானைகள் உடலை சொறிந்து கொள்ள குச்சிகளை பயன்படுத்தும் வீடியோக்க்கள் பன்னராகட்டா வனச்சாரணலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

You know one of the landmark of evolution in Homo sapiens was use of tools. True for many species. Here two elephants are observed using tools. Rise of the planet of elephants !! @ANI pic.twitter.com/ulWMHfNtn5

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 24, 2020 ">

ஏற்கெனவே, நாகர்ஹோலே தேசிய பூங்காவில் உள்ள யானைகள் ஈக்களை விரட்ட குச்சிகளை பயன்படுத்தியது கண்டுபிக்கப்பட்டுள்ளது. சிம்பன்ஸிகள் மற்றும் ஒராங்குட்டன்கள்தான் கற்கள், குச்சிகளைக் கருவிகள் போல பயன்படுத்தும் அறிவாற்றல் பெற்றவை. தற்போது, குச்சிகளைக் கருவிகளாகப் பயன்படுத்தும் அறிவாற்றலை யானைகளும் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. யானைகள் குச்சியால் உடலை சொறிந்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 'யானைகள் புத்திசாலித்தனத்துடன் கூடிய வெள்ளந்தியான விலங்குகள்' என்று நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments