இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

0 2943
நியாயவிலைக் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டம்

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசம் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

தரமான பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசம் தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகக் கவசத்தைத் துவைத்துக் காயப்போட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகக் கவசங்கள் தயாராக உள்ளன. மீதமுள்ள 7 கோடி முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். நியாயவிலைக் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments