ஜெயலலிதா இல்லத்தை தமிழக அரசு கையகபடுத்துவதற்கு ஜெ.தீபா எதிர்ப்பு

0 1282

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு கையகபடுத்துவதற்கு அவருடைய சகோதரரின் மகள் ஜெ. தீபா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு செய்திருப்பது அத்துமீறிய செயல் என்றும்,  தனியார் சொத்துக்களுக்கு தொகை நிர்ணயிப்பது தவறு என்றும் தெரிவித்தார். 

ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்குவதில் தமக்கு உடன்பாடில்லை என்றும், இதை எதிர்த்து நீதிம ன்றத்தில் முறையீடு செய்ய போவதாகவும் அவர் கூறினார்.

உரிமைக்காகதான் தாம் போராடுவதாக கூறிய ஜெ.தீபா, ஒருவேளை நியாயமான முறையில்  அனுகியிருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம் எனவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments