நாட்டில் முதன்முறையாக ஒரே நாளில் 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை

0 1380
நாட்டில் ஒரே நாளில் சாதனை அளவாக 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரே நாளில்  சாதனை அளவாக 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சக அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 49 ஆயிரத்து 68 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் உயிரிழப்பு கணிசமாக குறைந்துள்ளதாகவும், உயிரிழப்பு விகிதம் 2 புள்ளி 35 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 32,223 பேர் குணமடைந்துள்ளதாகவும், குணமானோர் விகிதம் 63 புள்ளி 54 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments