விவசாயி அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி

0 3248
குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தில் வனத்துறையினரின் விசாரணையின் போது உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்துக்குப் பத்து லட்ச ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்காசி வட்டம் ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்ததைக் கண்டுபிடித்த வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின்போது நெஞ்சுவலி ஏற்பட்டுத் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

தென்காசி அருகே விவசாயி உயிரிழப்பு தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே அரசின் நிதியுதவியைப் பெறுவோம் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே, அணைக்கரை முத்து மகள் வசந்தி கடையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமான வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே அரசு அறிவித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வோம் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments