தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது

0 6186
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று வரை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று வரை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்களுள் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மூவாயிரத்து 320 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக தொற்று பரவி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மதுரையில் 290 பேருக்கும், செங்கல்பட்டில் 271 பேருக்கும், கன்னியாகுமரியில் 266 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments