தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது தமிழக அரசு

0 844
தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், உடற்பயிற்சிக் கூடத்தைத் திறக்கவும், நீச்சல் பயிற்சிக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதித்துள்ளது. 15 வயதுக்குட்பட்டோரும் 50 வயதுக்கு மேற்பட்டோரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என  அறிவுறுத்தியுள்ளது.

விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களில் யாரேனும் ஒருவருக்குத் தொற்று உறுதியானால் சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், அவருடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments