நண்பனே பணத்துக்காக 29 வயது இளைஞரை கடத்தி கொலை

0 4963
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்புரில் நண்பனே பணத்துக்காக கடத்திச் சென்று 29 வயது இளைஞரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்புரில் நண்பனே பணத்துக்காக கடத்திச் சென்று 29 வயது இளைஞரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சீத் யாதவ் என்பவரை அவர் நண்பர் தனது 5 கூட்டாளிகளுடன் கடத்திச் சென்றதாகவும் அவர் பிடியில் இருந்து சஞ்சீத் தப்ப முயற்சித்தபோது கொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சஞ்சீத்தின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு ஆற்றங்கரையில் வீசிய கொலையாளிகள், கொலை செய்த பிறகும் கூட சஞ்சீத்தின் குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

பின்னர் 30 லட்சம் ரூபாய் பெற ஒப்புக் கொண்டனர்.  கொலையாளிகள் பணத்தைப் பெற வந்த போது போலீசார் விரித்த வலையில் சிக்கியுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments