செல்பி எடுக்கும் ஆர்வத்தில்.. நடு ஆற்றில் சிக்கி கொண்ட மாணவிகள்..!

0 3370

மத்திய பிரதேசத்தில், செல்பி எடுக்கும் ஆர்வத்தில், ஆற்றில் சிக்கி கொண்ட 2 பள்ளி மாணவிகளை, போலீசார் பத்திரமாக மீட்டனர்.

Chhindwara மாவட்டம் Belkhedi கிராமத்தில் உள்ள Pench ஆற்றுக்கு, 6 பதினோராம் வகுப்பு மாணவிகள் சுற்றுலா வந்தனர்.

அப்போது இரண்டு மாணவிகள் ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் நின்று செல்பி எடுக்க முயற்சித்தபோது, ஆற்றில் ஓடும் நீரின் அளவு அதிகரித்ததால், கறைக்கு திரும்ப முடியாமல் பாறை மீது நின்றபடியே கூச்சலிட்டனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், உள்ளூர் வாசிகளின் உதவியுடன், கயிறு கட்டி ஆற்றில் இறங்கி, இரு மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். சாகச செல்பிகளுக்கு ஆசைப் பட்டு, ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கிய மாணவிகளுக்கு, போலீசார் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments