அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி

0 4277

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆகஸ்டு ஐந்தாம் நாள் பூமிபூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவுக்கு 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், கொரோனா சூழலில் இவர்கள் கூடுவது சமூக இடைவெளி விதிமுறையை மீறியதாகும் என்பதால், பூமி பூஜைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சாகேத் கோகலோ என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்வார்கள் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்த மனு ஊகத்தின் அடிப்படையிலானது என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments