கொரோனா நோயாளிகள் குறித்த பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 787
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஆதிகேசவன், மருத்துவமனையிலிருந்து மாயமானார். இவரை மீட்டுத் தரக்கோரிய மனு விசாரணையின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், மாயமான ஆதிகேசவனை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை போல தாங்களும் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அப்போது நீதிபதிகள், கொரோனா நோயாளிகளை கையாள்வதில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மாநகராட்சி தரப்பில், தங்களுக்கும் சுகாதார துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதாகவும், கொரோனா நோயாளிகள் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகளை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments