5 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

0 9414
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான டெல்லி எய்ம்சில், 5 பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது.

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின்  சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான  டெல்லி எய்ம்சில், 5 பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது.

டெல்லி எய்ம்சில் ஆரோக்கியமான 100 நபர்களிடம் முதற்கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதில் பங்கேற்க உள்ளவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்து கொண்டிருப்பதாவும், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 10 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அதில் கிடைக்கும் முடிவுகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் நெறிமுறை குழுவினர்  ஆராய்ந்த பின்னர் எஞ்சியவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே தடுப்பூசி சோதனைக்கு தாமாக முன்வந்துள்ள 3500 பேருக்கு நீரிழிவு, ரத்தகொதிப்பு, சிறுநீரக நோய்கள், இருதய-கல்லீரல் பிரச்சனைகள் உள்ளனவா என சுமார் 50 வகையான பரிசோதனைகள்  நடத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு தகுதியானவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணையுடன் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments