தமிழகத்தில் சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க ஏற்பாடு

0 1636
தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு சத்துணவுக்கு மாற்றாக அரிசியும் பருப்பும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு சத்துணவுக்கு மாற்றாக அரிசியும் பருப்பும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1முதல்10ஆம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் செயல்படாத நிலையில்,மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில் வங்கிகள் வழியாக பணம் அனுப்ப முடிவு செய்து  வங்கிக்கணக்கு விவரம் சேகரிப்பட்ட நிலையில், பணம் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தலா 4கிலோ 650கிராம் அரிசியும், 1கிலோ 250 கிராம் பருப்பும் வழங்க முடிவெடுத்து முதற்கட்டமாக 1முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வழங்கப்படும் நிலையில், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி வாங்கிச் செல்ல பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments