7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

0 1852

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  மிதமான மழையும், வட கடலோர தமிழகம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் பதிவாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments