நாடு முழுவதும் கொரோனா பரவல் புதிய உச்சம்... கடந்த 24 மணி நேரத்தில் 49,310 பேருக்கு கொரோனா.. 740 பேர் பலி

0 1233
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், அத்தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், அத்தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேர் உயிரிழந்ததால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 601ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சையில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 பேர் குணமாகி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 502ஆகவும், உயிரிழப்பு 12, 854ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்து 92 ஆயிரத்து 964ஆகவும், டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 27 ஆயிரத்து 364ஆகவும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments