கொரோனா கேர் சென்டரில் 14 வயது சிறுமிக்கு மற்றொரு கொரோனா நோயாளி பாலியல் தொல்லை

0 4054
டெல்லியில் கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 14 வயது சிறுமிக்கு, மற்றொரு கொரோனா நோயாளி பாலியல் தொல்லை

டெல்லியில் கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 14 வயது சிறுமிக்கு, மற்றொரு கொரோனா நோயாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, சர்தார்பூரில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி கழிவறைக்கு சென்றபோது, அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 19 வயது இளைஞன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 15ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments