உலகம் முழுவதும் ஒரே நாளில் 2.65 லட்சம் பேருக்கு கொரோனா

0 933
உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்தைக் கடந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் பிடித்திருந்தாலும் பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பலியானவர்களின் விகிதாச்சாரத்தில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலும் அதற்கு அடுத்த இடத்தில் மெக்ஸிகோவும்,இந்தியாவும் உள்ளன. நேற்று ஒரேநாளில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 94 லட்சத்து 87 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையிலும், 55 லட்சத்து 9 ஆயிரம் பேர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களில் 66 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments