பிறந்த குட்டியை பரிதவிக்க விட்டுச் சென்ற தாய் யானை... தாயுடன் சேர பாசத்துடன் பிளிறிய குட்டி யானை

0 3280
கர்நாடக மாநிலம் குடகு அருகே, தாய் யானையுடன் சேர குட்டி யானை போராடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலம் குடகு அருகே, தாய் யானையுடன் சேர குட்டி யானை போராடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. விராஜ்பேட்டை அருகே காபித் தோட்டத்திற்கு வந்த யானைக் கூட்டம் ஒன்றில், கர்ப்பிணி யானைக்கு குட்டி பிறந்தது.

எதிர்பாராதவிதமாக அந்தக் குட்டி பள்ளத்தில் விழுந்ததால் தாய் யானை செய்வதறியாது திகைத்தது. குட்டியை மீட்க முயற்சித்தும் முடியாததால் தாய் யானை புறப்பட்டு சென்றது. தாயை காணாது தவித்த குட்டி யானை பள்ளத்தில் இருந்தபடி பிளிறியது.

குட்டி யானை விழுந்து கிடப்பதை கண்ட காபி தோட்ட உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் பள்ளத்தில் கிடந்த குட்டி யானையை குளிப்பாட்டி உணவு அளித்தனர். மேடான பாதையை உருவாக்கியதும் அதன் வழியாக மேலே வந்த குட்டியானை தளிர் நடை போட்டு தாயை தேடியவாறு நடக்க முயன்றது. அதற்குள் குட்டி யானையின் பிளிறல் சத்தம் கேட்ட தாய் யானை அங்கு வந்து தனது குட்டியை தும்பிக்கையால் அணைத்துக் கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments