வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு வாழ்வளிக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி

0 17492
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பால்முகவர்களாக்கும் புதிய முயற்சியை ஆவின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பால்முகவர்களாக்கும் புதிய முயற்சியை ஆவின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பால் முகவர்கள் ஆவதற்கான வைப்புத்தொகை 10ஆயிரத்திலிருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்கப் பட்டுள்ளது என்றும், ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகங்களிலும், சென்னையில் ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொதுமேலாளரிடம் ஆயிரம் ரூபாய் பணமாகவோ, காசோலையாகவோ வைப்புத் தொகை செலுத்தி உடனடியாக நடமாடும் பால்வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments