உக்ரைனில் பணயக் கைதியாக கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி

0 1077

உக்ரைனில், காவல் துறை உயர் அதிகாரியை பணையக் கைதியாக கடத்திச் சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொல்டாவாவில், வாகன திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது, அவர் தன் வசமுள்ள கையெறி குண்டை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டி, காவலர் ஒருவரை பணையக் கைதியாக பிடித்து வைத்தார்.

போலீசார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையால், அந்த காவலரை விடுவித்து விட்டு, அவருக்கு பதில் காவல் துறை உயர் அதிகாரியை பணையக் கைதியாக, காரில் கடத்திச் சென்றார்.

உக்ரைனில், கடந்த செவ்வாய் அன்று, ஒருவர் 13 பயணிகளை பணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில், இன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments