மாணவர் சேர்க்கை விதிகளில் தளர்வு..!

0 2215

ஐஐடி கல்லூரிகளைத் தொடர்ந்து NIT மற்றும் மத்திய அரசின் பிற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விதிகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

NIT மற்றும் மத்திய அரசின் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில JEE தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதி உள்ளது.

ஆனாலும் தற்போது நிலவும் சூழ்நிலைகள் காரணமாக, மத்திய இருக்கை ஒதுக்கீடு வாரியம் (csap) NIT மற்றும் பிறவற்றில் சேருவதற்கான தகுதி அளவுகோலை தளர்த்த முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன்படி 2020ல் நடந்த JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை மட்டும் அளித்தால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments