கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால்.. 2 ஆண்டுகள் சிறை,1 லட்சம் அபராதம்..!ஜார்கண்ட் அரசு அவசர சட்டம்

0 1563

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா தடுப்பு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறினால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை மீறுதல், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் விதிகளை மீறி கூட்டமாக திரளுதல் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல் ஆகிவற்றுக்கு இந்த தண்டனை விதிக்கப்படும் என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இதுவரை இவற்றுக்கான தண்டனை சட்டம் எதுவும் இல்லாததால், தவறு செய்பவர்களை தண்டிக்க இயலாமல் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments