மதுவைப் பிடிங்கிக் குடித்த ரவுடியை தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்த இளைஞர்

0 19961

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சின்னாளப்பட்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் வசிக்கும் பூண்டி சரவணன் என்பவன் பிரபல ரவுடி ஆவான்.  இவன் மீது திருட்டு, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களுக்காக திருப்பூர், கோவை போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே கிராமத்தைச் சேர்ந்த கோபியும் பூண்டி சரவணனும் நண்பர்கள் ஆவார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம் என்று சொல்கிறார்கள்.

நேற்றிரவு டாஸ்மார்க் கடைக்கு மது வாங்க கோபி சென்றுள்ளான். அப்போது, அங்கு நின்ற ரவுடி பூண்டி சரவணன் வருவோர் போவோரிடம் அடாவடியில் ஈடுபட்டு அவர்கள் வைத்திருந்த மதுவைப் பிடுங்கிக் குடித்துள்ளான். அதே போன்று கோபி கையிலிருந்த மதுவைப் பிடுங்கிய சரவணன், அதை ஒரே மடக்கில் குடித்துள்ளான். இதனால்,  பூண்டி சரவணனுக்கும் கோபிக்கும் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. பூண்டி சரவணன் தாக்கியதில் கோபி காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.

அடி வாங்கிய அவமானத்தில் இருந்த கோபி கோபத்தில் கஞ்சா அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் வெறி ஏறிய நிலையில், கோபி தன்னைத் தாக்கிய பூண்டி சரவணனைப் பழி வாங்க துடித்தான்.  பின்னர், நேராக டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளான். டாஸ்மாக் கடை முன்பு,  போதை தலைக்கேறிய நிலையில் பூண்டி சரவணன் மயங்கி கிடக்க, அதைப்  பார்த்ததும் கோபிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உடனே, அருகில் கிடந்த கல்லை எடுத்து பூண்டி சரவணன் தலையில் போட்டுவிட்டான். இதில், சம்பவ இடத்திலேயே கோபி இறந்தும் போனான்.  

தகவலறிந்த போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து ரவுடி பூண்டி சரவணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கோபியைப் போலிசார் கைது செய்துள்ளனர். ஆத்திரத்தில் பூண்டி சரவணனைக் கொலை செய்ததை கோபி ஒப்புக் கொண்டான்.

கஞ்சா போதையில் ரவுடியை கொலை செய்த  கோபி இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments