இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும் விதத்தில் ரபேல் போர் விமானத்தில் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு

0 4198
இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும் விதத்தில் ரபேல் போர் விமானத்தில் ஹம்மர் ஏவுகணையை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும் விதத்தில் ரபேல் போர் விமானத்தில் ஹம்மர் ஏவுகணையை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

லடாக் எல்லைப் பிரச்சனையில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், எந்த வித அத்துமீறலையும் எதிர்கொள்ளும் விதமாக இந்திய படைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியான விமானப் படையின் பலத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரான்சிடம் இருந்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் வரும் 29 ஆம் தேதி இந்தியா வர இருக்கின்றன. அந்த விமானங்களில் பொருத்தப்படும் நீண்ட தூர இலக்கை தாக்கும் ஸ்கேல்ப் ஏவுகணை, வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் மெடியர் ஏவுகணைகளும் அதற்கு முன்னதாக இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த விமானங்களில் பொருத்துவதற்காக பிரான்சிடம் இருந்து ஹம்மர் ஏவுகணைகளையும் வாங்க இந்திய விமானப்படை வாங்க இருக்கிறது. பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் அவசர கால கொள்முதல் சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் தரப்பிலும் ஏவுகணைகளை உடனடியாக இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹம்மர் ஏவுகணைகள் பிரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படைக்காக நடுத்தர தொலைவில் உள்ள இலக்கை தாக்குவதற்காக உருவாக்கப்பட்டது. குறிப்பாக 60 முதல் 70 கிலோ மீட்டர் தூரம் வரை தரையில் உள்ள இலக்கை, வானில் இருந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

மலைப்பகுதியான இடம் உள்ளிட்ட எந்த விதமான நிலப்பரப்பிலும் உள்ள இலக்கு மீது தாக்குதல் நடத்த முடியும். பதுங்கு குழிகள், வலிமையான தங்கும் இடங்களையும் தாக்கி அழிக்க வல்லது. நவீன ஏவுகணைகளுடன் கூடிய ரபேல் போர் விமானம், பாகிஸ்தான், சீனாவை எதிர்கொள்வதற்கு இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments