நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை போலீசார் மீண்டும் சம்மன்

0 1715
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார், நடிகை கங்கனா ரனாவத்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு மேலும் ஒரு முறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார், நடிகை கங்கனா ரனாவத்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு மேலும் ஒரு முறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட போது, அது பாலிவுட் திரைப்பட மாபியாக்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை என கங்கனா கடுமையாக சாடினார்.

இதனால் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் பாந்த்ரா போலீசார், ஏற்கனவே கங்கனாவிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். அப்போது கங்கனா சொந்த ஊரான மணாலியில் இருந்ததால், அவரது மேலாளர் அம்ரிதா தத் சம்மனை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது.

ஆனால் அதனை மறுத்த கங்கனா, தான் விசாரணைக்கு ஒப்புக் கொண்டதாகவும் அதற்கு பின்னர் போலீஸ் தரப்பிலிருந்து அழைப்பு வரவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் அவரை ஆன்லைன் மூலம் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கங்கனா விசாரணைக்கு ஒத்துழைப்பார் என அவரது சகோதரி ரங்கோலி சாண்டல் போலீசுக்கு பதிலளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments