கொரோனா காலகட்டத்திற்கு தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது... குஜராத் அரசு அதிரடி

0 1832
கொரோனா காலகட்டத்திற்கு தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது... குஜராத் அரசு அதிரடி

கொரோனா பாதிப்பால்  மூடப்பட்டு கிடந்த காலகட்டத்திற்கு தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என குஜராத் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அதே போன்று 2020-21 கல்வியாண்டில் கல்விக்கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை, ஊரடங்கு காலத்திற்கான கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது, கொரோனா பாதிப்பை முன்னிட்டு கட்டண சலுகைகளை அறிவிக்க வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்த வேண்டும் என 3 பொதுநல வழக்குகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவலையில் உள்ள நேரத்தில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவால் சுமார் 35 லட்சம் மாணவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை உடனடியாக நிறுத்துவதாக சுயநிதி பள்ளிகள் அறிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments