நாட்டின் வளர்ச்சியில் என்ஜினாக இருப்பதற்கான ஆற்றல் வடகிழக்கு மாநிலங்களுக்கு உள்ளது - பிரதமர் மோடி

0 4566
நாட்டின் வளர்ச்சியில் என்ஜினாக இருப்பதற்கான ஆற்றல் வடகிழக்கு மாநிலங்களுக்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் என்ஜினாக இருப்பதற்கான ஆற்றல் வடகிழக்கு மாநிலங்களுக்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 16 மாவட்ட மக்களுக்கு 3054 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் காலகட்டத்திலும் இந்தியா பணியாற்றுவதை நிறுத்தவில்லை என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி இருப்பதாக கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது அமைதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மணிப்பூரில் பல தசாப்தங்களாக இருந்த வன்முறை சகாப்தம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

திரிபுரா, மிசோரம் மாநிலங்களிலும் வன்முறை பாதையை இளைஞர்கள் கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அதற்கு எதிராக தீவிரமாக போராட வேண்டும் என்றும், வளர்ச்சிப் பணிகளை முழு வேகத்துடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments