'தமிழக முதல்வராக ரஜினிக்கு 10 நாள்கள் போதும் ' - நடிகர் எஸ்.வி. சேகர்

0 19110

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக பல ஆண்டுகளாக கூறி வருகிறார். 2021- ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்குள் தொடங்குவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லையென்றால், இனிமேல் எப்போதுமே கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

தற்போது, கொரோனா லாக்டௌன் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்பதை எதிர்பார்த்து அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி. சேகர் கூறியதாவது, ''மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பி போனால், நமது உடல்நிலையை மீண்டும் மோசமாக்கும் வகையில் மருத்துவ கட்டணம் வசூலிக்கிறார்கள். இருமல் தும்மல் மூலம்தான் கொரோனா  பரவுகிறது என்றால், கொரோனாவால் இறந்தவர்கள் உடலை அவ்வளவு பாதுகாப்பாக உடலை பார்க்க முடியாமல் கூட புதைப்பது ஏன் என்பதை மருத்துவர்கள் விளக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு சென்றால், அங்கிருக்கும் டாக்டரை என்ன சாதி எந்த மதம் என்றோ கேட்டு விட்டா சிகிச்சை மேற்கொள்கிறோம். அதே போலவே எல்லா இடத்திலும் சாதி, மதத்தை பார்க்காத நிலை உருவாக வேண்டும். ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் போதும் அடுத்த 10 நாள்களில் தேர்தல் வந்தால் கூட தமிழக முதல்வராகி விடுவார். அவரை தமிழக மக்கள் முதவராக்கி விடுவார்கள்.

பாரதிய ஜனதா கட்சியில் எனக்கு பதவி கொடுக்கவில்லை என்றெல்லாம் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை பொறுத்த வரை , தி.மு.க இந்துகளுக்கு எதிரான கட்சித்தான். திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான் அதிகமான சிலை திருட்டு நடந்துள்ளன. கோயில்களை கட்டுப்படுத்துவதிலிருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும்''

இவ்வாறு எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments