ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தொடர்பில் இருந்த யாருக்கும் கொரோனா இல்லை-ஆளுநர் மாளிகை

0 1912

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தொடர்பில் இருந்த யாருக்கும் கொரோனா இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

அறிகுறி தென்பட்டதால் ஆளுர் மாளிகையில் பணியாற்றிய பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் உள்ளிட்ட மொத்தம் 147 பேருக்கு சோதனை செய்ததில் 84 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் மாளிகை வளாகத்தில் மெயின் கேட்டுக்கு வெளியே பணியில் இருந்த  இவர்கள்  சுகாதாரத் துறையால் குவாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று விவரம் வெளியானதை அடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும், மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கிருமிநீக்கம் மற்றும் துப்புரவு பணிகளை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments