திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத் தேர்தல் இல்லை-தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

0 1218
காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கொரோனா பேரிடர் காரணமாகஇப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கொரோனா பேரிடர் காரணமாகஇப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமியும்,பிப்ரவரி 28 ஆம் தேதி குடியாத்தம் தொகுதி உறுப்பினர் காத்தவராயனும்  உடல்நல குறைவால் காலமாகினர்.

தேர்தல் ஆணைய விதிப்படி 6 மாதங்களுக்குள், அதாவது அடுத்த மாதம் 26, 27 தேதிகளுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.மாநிலங்கள் அனைத்தும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் நடத்த தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் படுத்துதல், தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  இந்த இரண்டு தொகுதிகளுக்கும் செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments