16 நிறுவனங்களுடன்.. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்..!

0 705
தமிழகத்தில் 16 நிறுவனங்கள் ஐயாயிரத்து 137 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமாகியுள்ளன.

தமிழகத்தில் 16 நிறுவனங்கள் ஐயாயிரத்து 137 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமாகியுள்ளன. 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் இந் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதால் ஆறாயிரத்து 555 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில், 2300 கோடி ரூபாய் முதலீட்டில், அதானி நிறுவனத்தின், தகவல் தரவு மையம் அமைப்பதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் - வடகால் தொழிற்பூங்காவில், சூப்பர் ஆட்டோ போர்ஜ் நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதேபோல் மொத்தம் 10 திட்டங்களுக்கு நேரடியாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த 6 நிறுவனங்களின் திட்டங்களுக்குக் காணொலி மூலமும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் www.investingintamilnadu.com என்ற புதிய இணையத்தளத்தையும் முதலமைச்சர் தொடக்கி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments