தனது திருமணம் பற்றி அவதூறு பரப்புவதாக கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நடிகை வனிதா புகார்

0 2940

சமூகவலை தளங்களில் தனது திருமணம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நடிகைகள் கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது நடிகை வனிதா புகாரளித்துள்ளார்.

வனிதா அண்மையில் திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு உதவி செய்யப்போவதாக கூறி சில வீடியோக்களை நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெளியிட்டனர். ஆனால் இந்த வீடியோக்கள் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி நடிகை வனிதா புகார் அளித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் வனிதா அளித்த இந்த புகாரில் நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்தரன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இதனிடையே வனிதா தன் மீது அளித்த புகாரை தான் சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments