பெற்றோரை படுகொலை செய்த தாலிபன் தீவிரவாதிகளை தம்பியுடன் இணைந்து சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமி

0 2607
ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கண்முன்னே படுகொலை செய்த தாலிபன் தீவிரவாதிகளை, தனது தம்பியுடன் இணைந்து சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமிக்கு பாராட்டுகள்

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கண்முன்னே படுகொலை செய்த தாலிபன் தீவிரவாதிகளை, தனது தம்பியுடன் இணைந்து சுட்டு வீழ்த்திய 15 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவி வரும் சூழலில், அரசுக்கு ஆதரவாக செயல்படும் பொதுமக்களையும் தாலிபன் தீவிரவாதிகள் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோர் மாகாணம் தியோரா மாவட்டத்தை சேர்ந்த கோமர் குல் (Qhamar Gul) என்ற சிறுமியின் தந்தை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், கடந்த 16ம் தேதி நள்ளிரவு அவர்களது வீட்டுக்கு வந்த தாலிபன் தீவிரவாதிகள் சிறுமியின் கண்முன்பே அவரது பெற்றோரை படுகொலை செய்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்த ஏகே-47 துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவரது தம்பியும் அந்த துப்பாக்கியை வாங்கி சுட்டதில் மேலும் சில தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மீதமிருந்தவர்கள் தப்பியோடினர்.

சிறுமியின் தீர செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சிறுமியும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments