4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் - ரஷ்ய பிரதமர்

0 3023
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பது பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பது பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருவதாகவும் 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்புக் குழுவான ரோஸ்போட்ரெப் நாட்ஸரின் தகவல்படி 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகி உள்ளது என்று கூறிய பிரதமர் மிக்கைல், இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன என்றும் மேலும் இரண்டு தடுப்பூசிகளின் பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments