இந்தியாவில் இதுவரை இல்லா வகையில் ஒரேநாளில் புதிதாக 45 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1448
இந்தியாவில் இதுவரை இல்லா வகையில் ஒரேநாளில் புதிதாக 45 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லா வகையில் ஒரேநாளில் புதிதாக 45 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 7 லட்சத்து 82 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர்.

4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் தற்போதைய நோயாளிகளாக மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 22 வரை மொத்தம் ஒரு கோடியே 50 லட்சத்து 75ஆயிரத்து 369 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூலை 22ஆம் நாள் மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரத்து 823 மாதிரிகள் சோதனை செய்ப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments