பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால், நேற்று இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், எம்எல்ஏ கோவிந்தராஜின் உதவியாளருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி #Peravurani | #ADMKMLA | #Govindarasu
— Polimer News (@polimernews) July 23, 2020
https://t.co/Ho0RSxiSs3
Comments